கேரள மாநிலம் கண்ணூர் மாவ ட்டத்தின் தளிப்பரம்பாவைச் சேர்ந்தவர் 59 வயதான வசந்தி செருவீட்டில். தையல்காரரான இவர் தன்னம்பிக்கை மற்றும் சுய கற்றலின் நம்ப முடியாத வெளிப்பாடாக எவரெஸ்ட் கீழ்நிலை (Base) முகாமுக்கு வெற்றி கரமாக தனியாக மலையேற்றம் செய்துள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்றால் கடினமான பயிற்சி, உடல்வாகு போன்றவை வேண்டும். ஆனால் வசந்தி முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாமல், அவர் தனது கடுமையான முயற்சி மற்றும் ஆன் லைன் ஆராய்ச்சியை நம்பி எவரெஸ்ட் சிகரம் ஏறி வரலாறு படைத்துள்ளார். பிப்ரவரி 15 ஆம் தேதி நேபாளத்தின் சுர்கேவிலிருந்து தொடங்கி பிப்ரவரி 23ஆம் தேதி 5,364 மீ உயரத்தில் உள்ள தெற்கு கீழ்நிலை முகாமில் வசந்தியின் எவரெஸ்ட் சிகர பயணம் முடிந்தது.