......திருவண்ணாமலை மாவட்டம் மே 6.5.2025 கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வாசவி ஜெயந்தி முன்னிட்டு இன்று காலையில் பெண்கள் பால்குடம் ஏந்தி மேளதாளத்துடன் வாசவி மஹால் வந்தடைந்தனர். உற்சவருக்கும் மூலவருக்கும் பாலபிஷேகம் நடைபெற்றது. பிறகு மூலவர்க்கு உற்சவருக்கும் அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. ஹரிராம் ஐயர், மணி ஐயர் அவர்களால் ஹோம திரவங்கள் அனைத்தும் சேர்த்து ஹோமம் வளர்க்கப்பட்டது. பிறகு பெண்கள் அனைவரும் மாவிளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனைகள் செய்து தீபாரதனையும் நடைபெற்றது. ஆரிய வைசிய பெண்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு தாம்பூலம் வழங்கப்பட்டது. வாசவி ஜெயந்தி விழாவினை ஆரிய வைசிய சமாஜ தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.