தமிழர்களின் வாழ்க்கை முறையில் இரண்டற கலந்தது வாழை இலையில் உணவு அருந்தும் பழக்கம். எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவதை தமிழர்கள் தங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
சரி, வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா? பார்க்கலாம்!
இளநரை வராமல் தடுக்க வாழை இலையால் முடியும். நீங்கள் வாழை இலையில் சாப்பிட்டு வருவதால் இளநரை வராமல் தடுத்து உங்கள் தலைமுடி அதிக நாட்கள் கறுமையாக இருக்கும்.
வாழை இலையில் உண்பதால் அவ்வளவு எளிதாக எந்த நோயும் வராது. ஏனெனில் வாழை இலை ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.
வாழை இலையில் உணவு உண்டுவந்தால் உங்களின் தோல் பளபளப்பாக இருக்கும்.
வாழை இலையில் உள்ள குளோரோஃபில் என்ற பொருள் நீங்கள் உண்ணும் உணவை எளிதில் சீரணமடைய செய்யும். உங்கள் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு நல்ல பசியை தூண்டும்.
வாழை இலையில் EPIGALLOCATECHIN GALLATE என்ற பாலிஃபினால் உள்ளது. இந்த பாலிஃபினால் உங்கள் உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடக் கூடியது.
இதயம் சார்ந்த ரத்த அழுத்த நோய்களை வாழை இலை உணவு கட்டுப்படுத்தும்.
வயிற்றுப்புண் மற்றும் தோல் நோய்கள் தீவிரமாக இருந்தால் குறையும். உடலிற்கு நல்ல குளிர்ச்சியை உண்டாக்கும்.
தமிழரின் என்றுமே அழிக்க முடியாத ஒரு பண்பாடாக வாழை இலையில் உணவு உண்பது திகழ்ந்து வருகிறது. வாழை இலையில் உணவு உண்போம் வளமாக வாழ்வோம்!