சென்னை, ஏப். 18-
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன்& மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கையை துறைவிதவைகள்,ஆதரவற்ற பெண்களுக்கு
கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் அமைச்சர் கீதா ஜீவன் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படும் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71 லட்சம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியத் தொகை ஆண்டொன்றுக்கு 61.61 கோடி ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் செயல்படும் சத்துணவு மையங்களில் 25 பயனாளிகளுக்கு அதிகமாக பயன்பெறும் 25,440 சத்துணவு மையங்களுக்கு 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு அடுப்புகள் புதியதாக வழங்கப்படும்.
* திருநங்கைகளுக்கான ‘’அரண்” எனும் பெயரில் இரண்டு தங்கும் இல்லங்கள், சென்னை மற்றும் மதுரையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கிரைண்டர் மானியம்
* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
* புகழ்பெற்ற, தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்தான குறைதீர்ப்பு மற்றும் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் ஐவிஆர்எஸ் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.
*பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.