சென்னை, மே 4
மத்திய அரசு, பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம்வழங்கப்படும்,.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கான தகுதிகள் வருமாறு:
* பிரதம மந்திரி டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டியது அவசியம்.
* அவருடைய பெயரில் சொந்த விவசாய நிலம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயி கடந்த 7 ஆண்டுகளில் டிராக்டர் ஏதுவும் வாங்கியிருக்க கூடாது.
* அதேபோல், இதற்கு முன்பும் டிராக்டர் மானியத் திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.
* விவசாயியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கும் மேல் இருக்க கூடாது.
* இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தகுதி உண்டு.
* திட்டத்தில் மானியம் பெற குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 60 ஆகும்.
* குறிப்பாக, சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
முக்கியமான ஆவணங்கள் :
* ஆதார் அட்டை
* பான் கார்டு
* ரேஷன் கார்டு
* வாக்காளர் அடையாள அட்டை
* வங்கி கணக்கு புத்தக நகல்
* நில உரிமை ஆவணங்கள்
* வருமானச் சான்றிதழ்
* சாதிச் சான்றிதழ்
* மொபைல் எண்
* பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
விண்ணப்பிப்பது எப்படி..?
* பிரதம மந்திரி டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் டிராக்டர் வாங்க மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
* பிறகு, அங்குள்ள அதிகாரிகளிடம் இத்திட்டம் குறித்து விவரித்து, இதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு, அதில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* பின்னர், உங்கள் விவரங்கள் அனைத்து சரிபார்க்கப்பட்ட உடன் மானியத்தில் டிராக்டர் வழங்கப்படும்.
இவ்வாறு மத்தியஅரசு அறிவித்துள்ளது.