கடல்மட்டத்திலிருந்து 10000அடி உயரத்தில் இமயத்தில் இருக்கும் முருகன் கோயில். கார்த்திக்ஸ்வாமி என்பதே இந்த இடத்தின் பெயர்.
உத்தராகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷிலிருந்து 175கிமீ தூரத்தில் உள்ள கனக்சௌரி என்னும் இடத்தை அடையவேண்டும். அங்கிருந்து 3கீமீ மலைமீது நடந்து இந்தக் கோயிலை அடையலாம்.
உலகை யார் முதலில் சுற்றிவருகிறாரோ அவர்களுக்கு முதல்மரியாதை என்று சிவபெருமான் சொல்ல, முருகன் மயில் மீது உலகைச் சுற்றி வரச் சென்றான். அதற்குள் பிள்ளையார் தாய் தகப்பனைச் சுற்றி வெற்றி பெறுகிறார். நமது ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி சரித்திரம் போலவே. ஆனால் இங்கே மாம்பழம் விஷயமில்லை.
கார்த்திகேயன் தியானம் செய்த மலை. க்ரௌஞ்ச பர்வதம்.
ஒருவிதத்தில் இதுவே வடபழனி.
இங்கே முருகன் தன் எலும்பை சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இங்கே நீங்கள் தரிசிப்பது முருகனின் உடலில் உள்ள எலும்புகளின் தரிசனம். பனியில் உறைந்துபோன எலும்புக்கூடு போலே உள்ள இந்த அமைப்பே முருகனாக அர்ச்சிக்கப்படுகிறார். இங்கே நமது ஊர் கோயில் போலே சிலையால் ஆன மூர்த்தி இல்லை.
கர்த்திகேயா....
கூகுள் லோகேஷன் ;
https://maps.app.goo.gl/kjStN6JpFHaYa8iWA
முருகனின் தரிசனம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரிபூரண சமாதானம் சாந்தி நிம்மதி எல்லாம் தரட்டும்.
-Radhakrishnan