tamilnadu epaper

ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்: ஸ்ரீ வைணவ மாநாட்டில் உபன்யாசம்*

ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்: ஸ்ரீ வைணவ மாநாட்டில் உபன்யாசம்*

வந்தவாசி, ஜூலை 30:

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி ஸ்வாமிகள் வைணவ சபையின் 41 ஆம் ஆண்டு ஸ்ரீ வைணவ மாநாடு ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வீரா. ராமானுஜ தாசர் தலைமை தாங்கினார். டாக்டர் எஸ். குமார், என்ஜியர் நிர்மல் குமார் ஆகியோர் கருடக்கொடியை ஏற்றி தொடங்கி வைத்தனர். நாதமுனிகள் வைணவ சபை தலைவர் கு. மணிவண்ணன் ராமானுஜதாசர் திருமால் வணக்கம் பாடலை பாடினார். மதுராந்தகம் ஸ்ரீமான் உ.வே. ரகு வீர பட்டாச்சார்யா ஸ்வாமிகள் பாடித்திரிவனே..! என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். பிறகு மாம்பட்டு பெ. பார்த்திபன் குழுவினரின் நாலாயிர திவ்வியப் பிரபந்த இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக தென்திருப்பேரை உ.வே. அரவிந்த லோஷன் ஸ்வாமிகளின் பங்கேற்று 'ஸ்ரீரங்க மகாத்மியம்' என்ற தலைப்பில் சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது. சிறப்பாக பாகவத கைங்கர்யம் செய்த கடமலை புதூர் துரை. ஏழுமலை ராமானுஜர் அவர்களுக்கு மாநாட்டில் 'ஸ்ரீ கைங்கர்ய செல்வர்' விருது வழங்கப்பட்டது. நிகழ்விற்கு முன்னதாக கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பஜனை கோஷ்டிகள் பிரபந்த பாடல்களை பாடியவாறு ரங்கநாத பெருமாள் கோவிலை அடைந்தனர். இறுதியில் செயலாளர் முத்து ராமானுஜதாசர் நன்றி கூறினார்.