விழுப்புரம் மாவட்டம் 27.4.2025 விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் நல்ல தண்ணீர் குளக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆற்காட்டம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அமாவாசை தினமான இன்று மூலவர் ஸ்ரீ ஆற்காட்டம்மனுக்கு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரத்துடன் உற்சவருக்கு ஊஞ்சல் சேவையும் மேளதாளத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. முருகன் பூசாரி அவர்களால் அபிஷேக, ஆராதனைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.