அகிலமே என் அப்பா தான்

அகிலமே என் அப்பா தான்



வாயோடு வாய் சேர்த்து இங்க்லிஸ் பட பாணியில் முத்தம் கொடுத்து கொண்டு இருந்தான் கதிர்.

காயத்திரியும்,கதிரும் புதியதாய் திருமணமானவர்கள் அதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.

இப்போது அவளை மார்போடு அணைத்து கட்டி தழுவினான்.

அப்போது வெளியே இருமல் சத்தம் கேட்டு ஓடினான்.

அப்பா ரகு உடம்பு சரி இல்லாமல் இருமி கொண்டு இருந்தார்.

என்னப்பா ஆச்சு.

சளித் தொல்லை அதான் இருமிட்டேன்ப்பா.

நீ உன் ரூமுக்கு போப்பா,நீ இந்த நேரத்துல எல்லாம் இங்கே வர கூடாது.

நீங்க முதல்ல மருந்த சாப்பிடுங்க அப்பா என தன் கரங்களால் கதிர் மருந்தைக் கொடுத்து விட்டு உள்ளே வந்தான்.

இந்த ஆளுக்கு விவஸ்தையே இல்லை,நேரம் கெட்ட நேரத்துல இருமி நம்ம சந்தோசத்தையே கெடுதிட்டான் .கிழட்டு முண்டம் என மருமக காயத்திரி மாமனாரை வசை பாடினாள்.

வாயை மூடு காயத்திரி,நீ எங்க அப்பாவ இவ்வளவு கடுமையா பேசியும் உன்ன அடிக்காம இருக்கிறதுக்கு காரணம் எங்க அப்பாவோட நல்ல வளர்ப்பு முறை.

ஒரு பொம்பளைய அடிக்கிறவன் நல்ல ஆம்பளை இல்லைன்னு எங்க அப்பா சொல்லுவார்.நம்ம சந்தோசத்த கெடுதிட்டாருன்னு நீ திட்டுற,ஆனா சின்ன வயசுல எப்போதும் அப்பா கூட தான் இருப்பேன்.இரவான கூட அப்பா தோள கட்டிக்கிட்டு கிடப்பேன்.கொஞ்ச நேரம் அப்பா என்ன விட்டு போனாலும் அழுது அடம் பிடிப்பேன்.எனக்காக எல்லா ஆச பாசங்களையும் துறந்திட்டு வாழ்ந்தவர் எங்க அப்பா.

எங்க அப்பா,அம்மாவுக்கு எவ்வளவு இடைஞ்சலா சின்ன வயசுல இருந்து இருக்கேன்னு வயசு வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கே புரிந்தது.

அம்மாவ இழந்திட்டு எனக்காகவே வாழ்ற ஒரு நல்ல மனுசனை எப்போதும் தப்பா பேசாதே.இன்னைக்கு சந்தோசமா இருக்க முடியலைன்னா இன்னொரு நாளைக்கு இருக்கலாம்.

என் வாழ்க்கையே என் அப்பாவுக்காக தான்.ப்ளீஸ் இன்னொரு தடவ தப்பா பேசாதே.

ஸாரீங்க,இனிமே நம்ம அப்பாவ தப்பா பேச மாட்டேன்னு கதிரின் நெஞ்சோடு முகம் புதைத்தாள் காயத்திரி!


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%