
நாடு நோக்கி நடந்து வந்த விலங்குகள்.. இங்கு தேடுகின்றதே தங்கள் வாழ்வினை..
நல் வாழ்வனை.!
காடு இன்று காடுகளாய் இல்லையே.. அங்கும் வந்து மனிதன் தந்தான் தொல்லையே.! இங்கு வாழுகின்ற எங்களையே.. வேட்டையாடி விரட்டிவிட்டு
தனக்கு வீடு கட்டுகிறான் காட்டிலே.. இதைத் தட்டிக்கேட்க யாருமில்லை நாட்டிலே.!
தட்டிக் கேட்க பேரணிகள் நடத்துறோம்! காட்டுக்குள்ளே விலங்குகள் நீதி கேட்கிறோம்! (நாடு)
விறகுக்காக மரங்களையே அழிக்கிறான்.. சிறகொடித்து கூண்டில் அடைத்து மகிழ்கிறான்!
தந்தம் தோல்கள் நகங்கள்.. யாவும் மனிதன் அழித்து தன் வயிற்றை வளர்க்கிறான்!
உயிரினங்கள் ஒன்று சேர்ந்து கேட்குதே.... எங்கள் உரிமைக்குரல் விண்ணில் எதிரொலிக்குதே..! (நாடு)
இறைவன் படைத்த உயிரினங்கள் யாவுமே.. ஒன்றாக வாழுவதே சொர்க்கமே.. உயிரை வதைத்து தின்றுவிட்டால் நரகமே.!உயிரிரக்கம் மனிதனுக்கு வேண்டுமே...!
சிங்கம் புலி யானைகளும் பறவைகளும்.. காட்டுக்குள்ளே ஒன்று கூடி.. ஊர்வலமாய்ப் போகுதே.. அதன் உரிமை குரல் உலகமெங்கும் கேட்குதே.!(நாடு)
-வே.கல்யாண்குமார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?