
*****************************
கூறடா! என் மானுடா!
யாருடையது இந்த நிலமடா?
யாரடா? வேலி யெழுப்பி
என் நிலம் என்கிறாயே நீ..
யாரடா.?
ஓரடி நிலத்திற்கு சண்டையிட்டாய்...
ஓரு வயிற்றில் பிறந்தும்
மண்டை உடைத்தாய்!
நூறடிச் சாலையில்
வீடுகள் கட்டி.. தினம்
பார்யென வீதியில் வீர
நடை நடந்தாய்!
ஆறடி நிலமே சொந்தமென்று நீ.. அறியாமலே கண் மூடிவிட்டாய்!
நிலமடந்தை குடல் கிழித்துக் குழியை வெட்டி.. அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்றே கவிப்பாடி.. காடுவெட்டிப் போட்டு.. கடிய நிலம்திருத்தி.. வீடுக்கட்டிக் கொண்டிருந்தாய்! ஓடு.. பானை உடைக்கயிலே..
ஆறடி நிலமே சொந்தமென்று அறியாமல் கண்மூடி உறங்கிவிட்டாய்.!
இந்த நிலம் பிறந்தாய்..
அந்த நிலம் எனதென்று பட்டயங்கள் எழுதிவைத்தாய்! சொந்த நிலம் சுற்றி சுவர்யெழுப்பி வேலியிட்டாய்.! அந்த நிலத்தில் ஆழ்துளையிட்டு அவளுடை உதிரம் உறிஞ்சி விட்டாய் ! இங்கே.. அல்லுற்றாய்.. அடடா..ஆறடி நிலமே சொந்தமென்று ஏனோ மறந்து விட்டாய்..!
-வே.கல்யாண்குமார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?