அணைக்கட்டு வட்டாட்சியருக்கு சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள் !
Nov 21 2025
19
வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட வருகிறது. இந்நிலையில் அணைக்கட்டு தாலுகாவில் எட்டு வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 722 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த இரண்டாம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. வரும் 27ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 25 பேருக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டி காண்பிக்கும் தேர்வு நடந்து வருகின்றது. இதில் தேர்வர்கள் சைக்கிளை ஓட்டி வட்டாட்சியருக்கு காண்பித்தனர். இந்த சைக்கிள் ஓட்டும் தேர்வர்களை தேர்வு செய்யும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?