அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் செங்கோட்டையன் நம்பிக்கை
Sep 14 2025
107
கோவை, செப். 15-
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி-
•அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் விடுத்த 10 நாள் கெடு, 2 நாட்களுக்குள் முடிவடைய உள்ளதே?
"எல்லாம் நன்மைக்கே"
•, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உங்களை சந்திப்பது ஏன்?
என்னைப் பொருத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கில், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பது எனது முழு ஆசை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
• மீண்டும் டெல்லி செல்வீர்களா?
“ காலம்தான் பதில் சொல்லும்”
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?