
அரியலூர்,செப், 23-
அதிமுகவை ஸ்டாலின் தான் காப்பாற்ற வேண்டும்என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
திமுக சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன் நடந்தது.இதில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது- "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பெண்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். பாஜகவை வீழ்த்துவதற்கும், தமிழ் மொழி, இனம் மற்றும் தமிழ்நாடு மானத்தை காப்பதற்காக நாம் ஓரணியில் இணைந்துள்ளோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளனர். அதிமுகவையும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் காப்பாற்ற வேண்டும்.
ஒரு கட்சிக்கு தலைவரான எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு, முதலில் அவர் கட்சியை காப்பாற்ற வேண்டும். பிறகு, முதலமைச்சரை பார்த்து குறை கூறுவதையும், கேலி செய்வதையும் செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?