அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்து முடக்கம்: பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்து முடக்கம்: பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை


 

புதுடெல்லி: ரிலை​யன்ஸ் குழும தலை​வர் அனில் அம்​பானிக்கு சொந்​த​மான மேலும் ரூ.1,400 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது.


இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறுகை​யில், “அனில் அம்​பானி மீது அமலாக்​கத் துறை பிஎம்​எல்ஏ சட்​டத்​தின் கீழ் ஏற்​கெனவே ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்கி நடவடிக்கை எடுத்​துள்​ளது. இந்த நிலை​யில், தற்​போது புதிதாக நாட்​டின் பல பகு​தி​களில் அனில் அம்​பானிக்கு சொந்தமான மேலும் ரூ.1,400 கோடி மதிப்​பிலான சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இதன் மூலம், அனில் அம்​பானிக்கு சொந்தமான ரூ.9,000 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்கத் துறை முடக்​கி​யுள்​ளது” என்று தெரி​வித்​தன.


அனில் அம்​பானி பண மோசடி தொடர்​பாக அமலாக்​கத் துறை சமீபத்​தில் முடக்​கிய சொத்​துகளில் மும்​பை​யில் உள்ள திரு​பாய் அம்​பானி அறிவு நகரம் (டிஏகேசி) தொடர்​புடைய 132 ஏக்​கர் நிலமும் அடங்​கும். இதன் மதிப்பு ரூ.4,462.81 கோடி ஆகும்.


மேலும், ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்​ஸ், ரிலை​யன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் உள்​ளிட்ட நிறு​வனங்​கள் வங்கி மோசடி வழக்​கிலும் ரூ.3,083 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புடைய 42 சொத்​துகளை அமலாக்​கத் துறை பறி​முதல் செய்​துள்​ளது.

--------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%