அன்புள்ள ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு


என் ஆக்கத்தில் உருவான இச் சிறு கதையை உங்கள் இதழில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.




பஞ்ச பூதங்களும் மொபைல் வடிவாகும்.


சுந்தர மணிவண்ணன்.

 

அன்று பாரதப்போரை, சஞ்சயன் லைவ் டெலி காஸ்ட் பண்ணது போல… 


சேனை, ரண்டு பக்கமும் குவிஞ்சிடுச்சு. சங்க நாதம் ஒலிக்குது. 

சண்டை தொடங்கப் போகுது. பாட்டி இப்படித்தான் கதையை இண்ட்ரஸ்டா தொடங்குவாள்..


அந்தச் சின்ன பெட்டியிலும் அத்தனை அதிசயமா? காத்திருந்தோம்.


 சென்னையில் டிவி கால் பதித்தது 1975ல்.


  ஷோ ரூம் திறப்பு விழா. உஸ்மான் ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  


அந்த பெட்டியைப் பார்க்கும் ஆசையில், என் பையனின் கை பிடித்து உஸ்மான் ரோட் நோக்கி நடந்தேன். பல ஷோ ரூம்கள் உஸ்மான் ரோட்டில் படை யெடுத்தன.


பல பிராண்டுகள். கருப்பு வெள்ளையில் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. .


  DDக்கு ஏகபோக உரிமை. மற்ற சேனல்கள் மார்கெட்டில் நுழையல


  வண்ணக் காட்சிகள் இல்லை .கருப்பு வெள்ளைதான்.

ஒலியும் ஒளியும். அது எங்களின் உயிர்.

 


 வீட்டில் கும்பலாய், ஒன்று சேர்ந்து பார்க்கும் சந்தோஷம். 


பையனின் நச்சரிப்பு. இப்பவே டிவி வேணும்..


 ஒண்டு குடித்தனம். இந்த நெருக்கடியில் வந்து தவிக்க,"டிவி" க்கு இஷ்டமில்லை.


 செலவுகளை சிக்கனமாக்கி, புற நகர் பகுதியில், புது வீடட்டில் குடி புகுந்தோம்.

 

உள்ளூர் வாசிகள் Dyanora,Solidare,BPL,Keltron,ECL, உற்சாகமாய் ஊர் வலம் வர. BPL எங்கள் வீட்டில் நுழைந்தார்.பன்னாட்டு பங்காளிகள் படை யெடுப்பில், இவைகள் எங்கே பதுங்கின.இன்னும் யாருக்கும் தெரியல.


 கனெக்க்ஷனுக்கு ஆண்டெனாவே கதி. கருப்பு வெள்ளையில் மட்டுமே காட்சிகள் வரும்.


 மாடியில் பொசிஷன் பார்த்து,ஆண்டெனாவை செட் பண்ணி, டி.வி.யும் , ஒலியும் ஒளியும் என அன்புடன் அழைத்தது,


"வாராயோ வெண்ணிலாவே ! கேளாயோ எங்கள் கதையை"

காதல் மன்னன் கை நீட்டி அழைக்க…... 


கிர்ர்ர்ர்……... சத்தம். 


டிவி பெட்டியில் கோடுகள் அலை அலையாய் ஓடின.... ஸ்கிரீன் மொத்தமாய் மூச்சை விட்டது..


சின்னவன் பெரியவனை விரட்டி

“ஆண்டெனா….அட்ஜஸ்ட்மென்ட்" என அலற….


அடித்த காற்றில் ஆண்டெனா திசை மாற. 

 

அடிக்கடி ஆண்டெனா அட்ஜஸ்ட் மெண்ட் …... நிகழ்ச்சிகள் பாதியில் தொங்கும்….மீதியை நாளை காண்க. நக்கலாய்  

நகர்ந்துச் செல்லும் T.V. 

 

தீபாவளி நெருங்க, வீடெங்கும் பர பரப்பு. சிறப்பு நிகழ்ச்சிகள் தோரணமாய் தொங்கும். தூக்கத்தைக் கெடுக்கும், 


 நாதஸ்வரம்,மஹான்களின் வாழ்த்துரை

 

"மலர் போல மனம் வேண்டும்" ராகதேவன் குரல் .


 ஷோபனாவின் செய்தி வாசிப்பு.


சாலமன் பாப்பையா பட்டி மன்றம்….அவர் இன்றும் மார்கண்டேயனாய்...


நடிகர்களின் வீடுகளில் மத்தாப்புச் சிரிப்பு.


உண்ட களைப்பாற, வெள்ளிவிழா தொட்ட படம் ,


கனவுகள் பல கண்டு,


 காலை நாலூ மணிக்கு….


எண்ணெய்,சுண்ணம் ஏந்தி அம்மா எங்களை எழுப்ப.

 

 "சீக்கிரம் டிவியை ஆன் பண்ணு டா" சின்னவன் பெரியவனை அலர்ட் பண்ண,


"மங்கள இசையை வை " அம்மாவின் சென்டி மென்ட்….


 நாதஸ்வர இசைக்கு டிவியை எழுப்பினோம். டிவியில் சத்தமில்லை" 


" கனெக்க்ஷனும் சரியா தான் இருக்கு"…


“ என்ன ப்ராப்ளம் பாருடா" சின்னவன் பதற,


"ஆண்டெனா திரும்பி இருக்கும்"…..


மாடிக்கு போன மது…."ஆண்டெனா மிஸ்ஸிங்." அலறினான்



"காற்றடிச்ச வேகத்தில் கழண்டு விழுந்ததோ?”…. சின்னவன் எச்சரிக்க,


 கண்ணுக் கெட்டிய மட்டில் ஆண்டெனாவைக் காணோம்…..


பக்கத்து வீட்டு பாலுவின் டிவியும் புஸ்.


ஏரியா எங்கும் ஒரே பர பரப்பு.


எல்லார் வீட்டிலும் ஆண்டெனாவை லூட் அடிச்சுட்டான்..

.

தெருவெங்கும் இதே பேச்சு.


 கடந்த கால கஷ்டங்கள் கண்ணில் வந்து போக,  

நிகழ் கால வளர்ச்சியில் எத்தனை ஆனந்தம். எல்ஜி, சேம்சங் என ஹாலை அலங்கரிக்க,கேபிள் கனெக்சனுக்கு அவனவன் க்யூவில் நிற்க,   


“ஏண்டா டிவியை ஆன் பண்ணி வச்சுண்டு மொபைலை யும்

நோண்டிண்டு”,


“கண்ணு கெட்டுப் போகும்.எதையாவது ஒன்ன வச்சுண்டு உருப்படியா பாரு” அம்மா அடிக்கடி வந்து வார்ன் பண்ண,


 “திரும்ப திரும்ப நெட் ஃப்ளெக்ஸ்ல சினிமாவைப் பார்த்துண்டு,

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல கிரிக்கெட் மேட்ச் பார்த்து, தெண்ட போது போக்கிண்டு” ..அம்மா திட்டத் தொடங்கினா அந்த ஹாலே அதிரும்.


ஆளுக்கொரு மொபைலை கையில்லேந்தி, அதில் மூழ்கிப் போவோம்.,


 எதிர் காலத்தை கொஞ்சம் எட்டிப் பார்க்க என் மனம் பறந்தது. 

 

6G யும், AI டெக்னாலஜியும் சேர்ந்தால், வெள்ளை ஸ்கிரீன் ஒன்று போதுமே . டிவி பெட்டியே வேண்டாம். மொத்தத்தையும் மொபைலில் விளையாடிப் பார்க்கும் காலம் வெகு தூரம் இல்லையோ.


ஆன்டெனா. தனிக் குடித்தனம் செய்யாது.


கேபிள் ,நெட் ஒர்க் ,டவர் கனெக்சன் தரகர்களுக்கு டாட்டா காட்டி, சேட்டிலைட் நேராக கை கோர்க்கும்.


கைபேசியே மெஹா கம்யூட்டர். ஏஸி,ஹீட்டர் என எல்லாம் அதன் கண்ட்ரோல். ஆஹா ! பஞ்ச பூதங்களும் அதற்குள் அடங்கிப் போகுமா.என்ன விந்தை. பாடத்துடித்தது என் மனம்.


 “ பஞ்ச பூதங்களும் மொபைல் வடிவாகும் ” 



by.சுந்தர மணிவண்ணன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%