அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை

வாஷிங்டன், செப். 21–


அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவின் தென் கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் படேல் என்ற குஜராத்தி பெண் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி கிரண் படேல் பெட்ரோல் பங்கில் பணத்தை எண்ணி கொண்டிருந்போது அங்கு வந்த ஒரு நபர் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் கிரண் படேலை சுட்டுவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையன் ஜைடன் மேக் ஹில் என்றும் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து தென் கரோலினா சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கொள்ளையன் பதுங்கி இருந்த இடத்தை அடைந்தபோது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. இறுதியில் கொள்ளையன் ஜைடன் மேக் ஹில்லை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%