
வாஷிங்டன், அக். 6–
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் (வயது 51) சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் உணவு கடை நடத்தி வந்தார். இவரது உணவகத்துக்கு வெளியே திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது சண்டையாக மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது ராகேஷ் ஏகபன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணையின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய 37 வயதான ஸ்டான்லி யூஜின் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இந்த மோதல் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது என போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாசில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் டல்லாஸ் நகரில் மர்ம நபரால் ஐதராபாத்தைச் சேர்ந்த பல் டாக்டர் சந்திரசேகர் போலே (வயது 27) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?