
சென்னை, அக்.6–
முதலமைச்சரால் தொடங்கப்பட்ட அன்புகரங்கள் திட்டத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலாவாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அந்த குழந்தைகளுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு, ‘இட்லி கடை’ திரைப்படம் சிறப்பு காட்சி பார்த்து, தியாகராய நகர் துணிக்கடையில் அவர்களுக்கு பிடித்த உடைகளை வாங்கி தந்து இனிப்புகள் வழங்கி வழி அனுப்பினார்.
தாயுமானவர் திட்டத்தில் அன்பு கரங்கள் எனும் பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 15–ம் தேதி முதலமைச்சரால் சீரிய திட்டம் ஒன்று செயலாக்கம் பெற்றது. அந்தத் திட்டத்தின் படி 6,082 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சைதாப்பேட்டையில் கடந்த மாதம் 24–ந் தேதி அன்பு கரங்கள் முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 399 குழந்தைகள் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை எல்லாம் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு மாதம் தோறும் 2000 வழங்கும் பயனாளிகளை சேர்க்க இருக்கிறார். சைதாப்பேட்டையில் விண்ணப்பித்த குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, காலை சிற்றுண்டி முடித்த பிறகு அவர்களை இட்லி கடை என்ற திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகள் மிக மகிழ்ச்சியோடு அந்த திரைப்படத்தை ரசித்தார்கள். அந்தக் குழந்தைகள் அனைவரோடும் தியாகராயர் நகரில் இருக்கிற ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புத்தாடைகளை வாங்கி தந்து இனிப்புகள் வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழி அனுப்பி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?