
சென்னை, அக்.6–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 1ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.87,600 என்ற உச்சத்தை எட்டியது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,160க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,280க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?