
அகிலத்தில் எங்கும் ஆனந்தம் வேண்டிட//
வேண்டும் நிம்மதி என்னும் நிசப்தம்//
நிசப்தமான உள்ளமே நித்தம் மகிழ்ச்சி//
மகிழ்ச்சிக்கு வேண்டிடு தூய்மை உறவு//
உறவு உண்மையானால் உணர்வும் மேன்மையாகும்//
மேன்மையான மேதினிக்கு நற்சுற்றம் நலமே//
நலமான இதயம் நன்மை பயக்கும்//
பயக்கும் பண்பும் பாசமும் பாரினில்//
பாரினில் பல்லுயிரும் இன்புற வேண்டும்//
வேண்டும் அமைதியெனும் ஆயுதம் அவனியில்//
*கவிஞர் மா. கணேஷ்,*
*கொன்னையூர்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%