கேசவன் ஜமுனாவை இரண்டாம் தாரமாக கைப்பிடித்து மூன்று நாளாகிறது. ஆனால் அவன் பெற்ற மகள் பூரணி இன்னும் முகம் கொடு த்துப் பேசவில்லை. தன் தந்தை மாபெரும் தவறுசெய்துவிட்டதுபோல் எண்ணி எண்ணிப் புழுங்கினாள்
பூரணிக்கு பத்து வயதாகி றது. கேசவனின் முதல் மனைவி லஷ்மி. பெயருக்கேற்றார்போல் லஷ்மீகரமாகஇருப்பாள்.
அவளின் அழகில் சொக்கிப்போய் வீட்
டில் இருப்பதற்காகவே அடிக்கடி லீவு போடுவான். எந்நேரமும் லஷ்மியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கிடப் பான். லஷ்மி கணவன் அநாவசி யமாக லீவு போடுவதை விரும்பவி ல்லை.
அதனால் அவனை அலுவல கம் போகும்படி கேட்டுக் கொள்வாள். அவனா....ம்ஹூம் ! தன்னிஷ்டம்
போல்தான் நடந்துகொள்வான். ஒவ்
வொரு ஞாயிற்றுக்கிழமையும் லஷ்மி
யை வெளியே கூட்டிச்செல்வான் கேச
வன்.
அவர்களின் இன்ப வாழ்க்கை க்கு அடையாளமாக அடுத்த வருடமே பூரணி பிறந்தாள். பூரணிக்கு பத்து வயது நிரம்பியது. யார் கண் பட்ட தோ..மூன்றுமாதம் முன்னால் லஷ்மிக்கு காய்ச்சல் கண்டது. வீட்
டில் இருந்தபடியே டாக்டரிடம் காண் பித்தான் கேசவன். ஆனால் மனைவி யின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. காய்ச்சல் கொங்சம்கூட குறையாமல் லஷ்மியை அலைக் கழித்தது. துவண்டுபோனாள். உடனே தாமதிக்காமல் மனைவியை ஆஸ்ப த்திரியில் சேர்த்தான். இரண்டு நாள் தான் உயிரோடிருந்தாள் லஷ்மி. புரு ஷனையும் ஒரேமகளையும் தவிக்க விட்டுப் போய்ச் சேர்ந்தாள்.கேசவ னும் மகள் பூரணியும் துடித்தார்கள். கதறியழுதார்கள். நாட்கள் ஓடின.
அவர்களின் துயரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங் கின !
இந்த சமயத்தில்தான் கேசவன் வேலை செய்யும் ஆபீஸில் மாற்ற லாகி வந்தாள் ஜமுனா. ஆனால் கேசவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் வேலை உண்டு என எண்ணி தலை கவிழ்ந்தவாறு வேலையில் கண்ணாயிரூந்
தான்.
ஜமுனா போனவருடம் கணவ னை ஒரு விபத்தில் பறிகொடுத் தவள் ! குழந்தைகள் கிடையாது.ஆபீஸில் சந்தேகம் எழும் விஷயங்களில் கேசவனை கேட்பாள் ஜமுனா. கேசவன் அவளைப் பார்க்கா மலே சந்தேகத்தை தீர்த்துவைப்பான். கேசவனின் கண்ணியம் அவளைக் கவர்ந்தது. தனக்கொருவாழ்க்கை த்துணை தேவை. அது ஏன்கேசவ னாக இருக்கக்கூடாது என நினை
த்தாள். கேசவன் ஏற்கனவே மனைவியை பறிகொடுத்தவன் என்பதையும் அறிந்துவைத்திரு ந்தாள். மெல்லக் காயை நகர்த்
தினாள். ஆரம்பத்தில் கேசவன் ஒத்துக் கொள்ளவில்லை.தனக்கு பத்துவயதில் ஒருமகள் இருக்கி றாள்.அதனால் இரண்டாவது திருமணம் என்பது முடியாது.
அது நன்றாக இருக்காது என வாதாடி
னான். அதற்கு ஜமுனா அவன் குழந் தையை தன் குழந்தையாக பாவித்து செயல்படுவேன் என்று உறுதியளி த்தாள்.கேசவன் தன் நண்பர்களை கலந்தாலோசித்தான்.கணேசன் என்ற நண்பன் , " நண்பா ! நீ தாராளமா இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கோ உன் பெண் பூரணிக்காக ! ஏனெ ன்றால் பூரணி பெரியவளானதும்
சில அசந்தர்ப்ப சமயங்களில் உன் னால் உன் மகளை நெருங்க முடி யாது. வேலைக்காரியையும் முழுவ துமாக எதிர்பார்க்கமுடியாது. உனக்கு உதவிசெய்ய உறவினரும் கிடை யாது. அதனால்தான் சொல்றேன். தாராளமா ஜமுனாவை இரண்டாம் தாரமாக கட்டிக்கோ ! " என்றான்.
அது சரியெனப் பட்டது. ஆயினும் நிறையதடவைகள் சிந்தித்தான். தன் மனைவி லஷ்மியின் புகைப்படம் அருகில் நின்றவாறு மானசீகமாக கேட்டுக்கொண்டான். லஷ்மி மானசீகமாக அனுமதி அளிப்பது
போல் பட்டது.இந்த விஷயத்தை தன் மகள் காதில் போட்டான். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை. கேசவ னுக்குஎன்ன வோப்போல் இருந்தது. ஆயினும் மகளை எப்படியோ கன்வி ன்ஸ் செய்து தன் இரண்டாவது திரு மணத்திற்கு சம்மதிக்க வைத்துவி ட்டான். அன்று இரவு டின்னர் முடிந்ததும், மகளைமொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான் கேசவன். சிமெண்ட் திண் ணைமீது இருவரும் அமர்ந்து கொண் டனர். கேசவன் பெருமூச்சொன்று விட்டான். " பூரணி ! உனக்கு இன்னொரு அம்மா கிடைச்சிருக்காங்க....." தந்தை முடிக்கு முன்னால் கோபத்து டன் இடைமறித்தாள் . " அதெப்படி இன்னொரூ அம்மா ஆகும் ! பெத்த வங்கதான் அம்மாவாக முடியும் !
அது சரி. அம்மா பேர் லஷ்மி. அந்தப்
பேர்ல இப்போ வநதிருக்கிற ஆன்டிய
நீங்க கூப்பிட முடியுமா...."மண்டையில் பொடேரென்று சம்மட்டியால்அடித் தது போல் துடித்துப்போனான் கேசவன். ' என்னவொரு பேச்சு ! வயதுமுதிர்ந்த வர்கள் பேச்சுமாதிரி ! ' சுதாரித்தவன் அசடு வழிந்தான் ! " பூரணி ! எனக்கு வேண்டியது நீங்கள் இருவரும் பரஸ் பரம் ஒற்றுமையாய் இருக்க வேண் டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் முகத் தைத் தூக்கிவைத்துக்கொள்ளக் கூடாது. நீ எப்போதும் எதிர்பார்க்குற
அன்புப் பாசமும் என்னிடம் குறை யாது. ஓக்கேவா டியர் ?"
பதில் சொல்லவில்லை. அரை மனதுடன் ' சரி' என்று தலையசைத் தாள் பூரணி.
இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.
அறைக்குள், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பூரணியின் காதோரம் அம்மா லஷ்மியின் குரல் " கண்ணு பூரணி..." ஒலித்ததுபோல் இருக்க
உடனே குஷியானாள் பூரணி.
"அம்மா ! எப்படிம்மா இருக்கே ? நீ ஏம்மா எங்களையெல்லாம் விட்டு அவ்வளவு சீக்கிரமா சாமிக்கிட்டே போயிட்டே !.... நீ போனதாலதான் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு !"
" அப்பா பண்ணது சரிதான் டியர் ! என
க்குத் துளிக்கூட வருத்தமே இல்லடா !
எல்லாம் உனக்காகத்தான்...."
" சரிம்மா ! அந்த ஆன்டிய நான் என்ன
ன்னுமா கூப்பிடறது ?"
" அம்மான்னே கூப்பிடலாம்."
" அதெப்படிம்மா அம்மான்னு கூப்பிட
றது ? பெத்தவங்க நீங்க. அதனால் உங்கள அம்மான்னு கூப்பிடலாம். அவங்களஅம்மான்னு கூப்பிட எனக்கு மனசு ஒப்பமாட்டேங்கிறது !" மெலி தாகச் சிரித்தாள் லஷ்மி.
" அன்பையும் பாசத்தையும் குறை யாமல் கொடுத்தால் நீ தாராளமாய் அவங்களஅம்மான்னு கூப்பிடலாம் டியர் !"
" அம்மா....அம்மா...." என்று அரற்றி யவள் சட்டென கண்விழித்தாள். கண்டது கனவு என்பது தெரிந்து போக சப்பென்று ஆனது பூரணிக்கு.
மறுநாள் கண் விழித்து எழுந்து வெளியேவந்த பூரணி வியப்புற்றாள். தந்தை பட்டு வேஷ்டியிலும் வெள்ளை ஷர்ட்டுடன் தோற்றமளிக்க சின்ன ம்மா பட்டுப்புடவையில்லஷ்மீகரமாக காட்சியளித்தாள் ! பூரணி அருகில் வந்த ஜமுனா, "டியர் ! சீக்கிரம் பல் தேய்ச்சு குளிச்சிட்டு வா. காஃபி தரேன். சாப்டுட்டு எல்லாருமாஒண் ணாக் கோயிலுக்குப் போகலாம்."
சின்னம்மா தன்னை டியர் என்று அழைத்தது ரொம்பவே பிடித்தி ருந்தது பூரணிக்குகாரணம் அம்மா அழைப்பது போலவேஇருந்தது.
சின்னம்மாவைக் குறு குறுவென்று
பார்த்த பூரணி , " அப்பா ! மேடத்த நான் எப்படி அழைக்கிறது ?"
" அம்மான்னு கூப்பிடு தங்கம் !"
சட்டென ஜமுனா ஆட்சேபித்தாள்.
" அது வேண்டாங்க ! " என்றவள், " என்னதான் இருந்தாலும் நான் பூரணிக்குத் தாய் கிடையாது. தாய் ஸ்தானத்தில்இருப்பவங்களுக்கு மட்டும்தான் 'அம்மா' ங்குற அழைப்பு பொருந்தும். நான் ரெண்டாந் தாரம்தானே ! என்னை ' சின்னம்மா' ன்னே கூப்பிடட்டும் !" என்றாள்.
அம்மா கனவில் சொன்னது நியாபகத்
தில் வந்தது. அன்பையும் பாசத்தை யும்செலுத்தும் பட்சத்தில் தாராளமாக
' அம்மா ' என்று அழைக்கலாம் என்று.
புன்முறுவலுடன் பூரணி , " நீங்க சின்
னம்மா இல்ல. என்னோட அம்மா" என
கூறிவிட்டு சிட்டாய் பறந்தாள்.கேசவ னும் ஜமுனாவும் மகிழ்ச்சியோடு
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்
டனர்.
............................................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்