சிரிக்க சில நிமிடம் .,
சிந்திக்க சில நிமிடம்..
அழ சில நிமிடம்..
அரவணைப்பில் சில நிமிடம்...
ஆறுதலில் சில நிமிடம்... என் ஆயுளை உன் வாயிலாக கொள்..
என் கனவுகளை நினைவாக்க வேண்டும்..
நீ வேண்டும்..
என் கற்பனையாக அல்ல என் கனவுகளாகவும் அல்ல என் காதலனாக ..
என் நண்பனாக..
என் தோழியாக..
என் உண்மையான ஒரு உறவாக..
நாளும் நீ தேவை..
என் நாட்களுடன் தேவை.. எனக்கான நேரங்களை உன்னோடு எடுத்துச் செல்.. உன் விழிகளின் கண் மணியாக காத்திடு...
ஏன் இந்த பிதற்றல் எதற்காக தேவையில்லாத எண்ணங்களை தேடுகின்றேன்.. தொலைத்து விட்டேன் ..
மீண்டும் தேடுகின்றேன்... என் வாழ்வின் கனா காலங்களை...
ஆம்..
என் பிள்ளை பருவத்தின் எல்லையை..
எடுத்துக் கொடு என் பேனாவே..
உன்னை என் விரல்களில் சுமக்கின்றேன்..
என் மனச்சுமையை உன் எழுத்துக்களில் மாய்த்து விடு...
மீண்டும் மலர துடிக்கும்
காகிதம்
கவிஞர் முனைவர் நா மோகன செல்வி மனோகரன்
கோபிசெட்டிபாளையம்
ஈரோடு மாவட்டம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?