ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் இன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான கொடியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காவிக்கொடியை ஏற்றவுள்ளார்
விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன்பிறகு விருந்தினா்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும். பாதுகாப்புக் கருதி, அன்றைய நாளில் மக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன
அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சரயு நதி படித்துறைகளுக்கு வா்ணம் பூசுதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமர் கோவில் முழுவதும் மலர்களால்அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவில் அர்ச்சகர் கூறுகையில், ராமர் கோவிலில், தர்ம துவஜ் (கொடியேற்றம்) விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அலங்காரத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ராமருக்கு மிகவும் பிடித்தமான பூக்களைப் பயன்படுத்துவது. இன்று அயோத்தி மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது.விநாயகர் மற்றும் ராமருக்கு முதலில் சாமந்தி பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலையும் நகரத்தையும் அலங்கரிக்க சுமார் 100 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றுதெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?