பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்
மும்பை: பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.
இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தர்மேந்திரா கடைசியாக 2023 இல், கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்தார்.
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?