தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருபவர் செலஸ்டின் மகிமைராஜ். கல்வி மற்றும் கலைகளில் சிறப்பான மாணவர்களை உருவாக்கி சேவை மனப்பான்மையையும் வளர்த்துவருகிறார். அவரது ஆசிரியர் பணியினைப் பாராட்டி, புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், செவெ புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேலூர் முத்தமிழ் சங்கம் மற்றும் பல்லடம் முத்தமிழ் சங்கம் சார்பாக புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் Dr.APJ அப்துல்கலாம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. அவரால் நேரில் பெற இயலாத சூழலில் அமைப்பின் நிறுவனர் உலக சாதனையாளர் செ.வெங்கடேசன் அவர்கள் வேம்பார் வந்து நேரில் பாராட்டி, விருதுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து மகிழ்ந்தார்.இதனை அறிந்த வேம்பார் பகுதி பொதுமக்களும் ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளை அறிந்து பாராட்டு தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?