அரசு ஆஸ்பத்திரியிலே தர்ற மாத்திரைக்கும், பிரைவேட் டாக்டர்கிட்ட காசு கொடுத்து வாங்குற மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?"
நம்ம எல்லாருக்கும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கும்.
உதாரணமா, சர்க்கரை மாத்திரை மெட்ஃபார்மின் 500 (Metformin 500) எடுத்துக்கலாம். ரெண்டும் ஒண்ணுதானா? இல்ல பிரைவேட்ல தர்றது 'ஒரிஜினலா'?
சிம்பிளா சொல்றேன்…, பெரிய வித்தியாசம் ஒண்ணுமே இல்லை!
மருந்து தயாரிக்கிற கம்பெனியில (Pharmaceutical) வேலை செய்யுற ஒரு நண்பர்கிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவர் சொன்ன விஷயம் என்னன்னா, அவங்க தயாரிக்கிற பெரும்பாலான மருந்துகளே 'ஜெனரிக்' (Generic) மருந்துகள்தானாம். 'ஜெனரிக்'னா என்ன? 'பிராண்டட்'னா என்ன? இதைத் தெளிவா புரிஞ்சுகிட்டாலே, உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடும்!
'Branded' மருந்துனா என்ன?
முதல்ல, ஒரு கம்பெனி பல வருஷங்கள், பல கோடிகள் செலவு செஞ்சு ஒரு நோய்க்கான புது மருந்தை (ஃபார்முலா) கண்டுபிடிக்குது. அதுக்கு அவங்க 'பேட்டன்ட்' (Patent) வாங்கிடுவாங்க. உதாரணமா, கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அந்த மருந்தை அவங்க மட்டும்தான் விற்க முடியும். அவங்க இஷ்டம் போல ஒரு “பிராண்ட் நேம்” (Brand Name) வெச்சு, அதிக விலைக்கு விற்பாங்க. ஏன்னா, அவங்க போட்ட ரிசர்ச் செலவையெல்லாம் எடுக்கணும் இல்லையா? அதனால தான் Branded Drug.
'Generic' மருந்துனா என்ன?
“”””””””””””””””””””””””””
இப்போ ட்விஸ்ட் பாருங்க! அந்த 20 வருஷம் பேட்டன்ட் முடிஞ்சதும், அந்த மருந்தோட ஃபார்முலா பப்ளிக் ஆகிடும். இப்போ, வேற எந்த கம்பெனி வேணும்னாலும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, அதே மருந்தை தயாரிக்கலாம். இதுக்கு பேருதான் Generic Drug (பொது மருந்து).
ஆனா…,
“ஃபார்முலா தெரிஞ்சா மட்டும் போதுமா, யார் வேணா செஞ்சிடலாமா?”ன்னு கேட்டா, முடியாது!
தரக்கட்டுப்பாடு:
“””””””””””””””
(Quality Control):
“”””””””””””””””””
அவங்க அந்த மருந்தை தயாரிச்சது மட்டும் போதாது. "இந்த மருந்து, அந்த ஒரிஜினல் பிராண்டட் மருந்து மாதிரியேதான் வேலை செய்யுது"ன்னு பல சோதனைகள் (Biosimilar tests) செஞ்சு நிரூபிக்கணும். அப்புறம், CDSCO, FDA மாதிரி பெரிய அரசு நிறுவனங்களோட அதிகாரிகள் நம்ம ஃபேக்டரிக்கு வந்து, நம்ம தயாரிப்பு முறையை ஆய்வு செய்வாங்க. அவங்க ஓகே சொன்னா மட்டும்தான் விற்க முடியும்!
அதுமட்டுமில்ல, எப்போ வேணும்னாலும் முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு வந்து செக் பண்ணுவாங்க (Surprise Audits). தரத்துல சின்னப் பிரச்சனை இருந்தாலும், கம்பெனியையே மூடச் சொல்லிடலாம்! அவ்வளவு ஸ்ட்ரிக்ட்!
அப்போ ஏன் விலை வித்தியாசம்?
அதனாலதான், ஒரிஜினல் கம்பெனி 20 வருஷம் ரிசர்ச் செலவெல்லாம் சேர்த்து ₹100-க்கு விக்கிற மாத்திரையை, இந்த ஜெனரிக் கம்பெனியால ரிசர்ச் செலவு இல்லாம, ₹15-க்கோ ₹20-க்கோ விற்க முடியுது. விலை கம்மியா இருக்குறதுனால இது தரம் கம்மியானதுன்னு தயவுசெஞ்சு நினைக்காதீங்க!
இந்த ஜெனரிக் மருந்துகளைத்தான் அரசு மருத்துவமனைகளிலேயும், 'ஜன் ஔஷதி' (Jan Aushadhi) கடைகளிலேயும் கொடுக்குறாங்க. சோ, அரசு மருத்துவமனையில தர்ற மெட்ஃபார்மினும், பிரைவேட்ல தர்ற மெட்ஃபார்மினும் (ஒரே கெமிக்கல் ஃபார்முலா இருந்தா) ஒண்ணுதான்! தைரியமா சாப்பிடுங்க!
குறிப்பு:
“””””””
எதற்கும் ஒருமுறை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது சாலச்சிறந்தது.
இன்னும் சில சந்தேகங்கள்:
“”””””””””””””””””””””””””
1. "பேட்டன்ட் முடிஞ்சப்புறமும் ஏன் அந்த 'Branded' மருந்தை இன்னும் விக்கிறாங்க?"
சிம்பிள்….
பேட்டன்ட் முடிஞ்சா, மத்தவங்களும் தயாரிக்கலாம்னு தான் அர்த்தமே தவிர, ஒரிஜினல் கம்பெனி தயாரிக்கக் கூடாதுன்னு சட்டம் இல்லை. அவங்க பிராண்ட் பெயரை வெச்சே விற்கலாம், அது அவங்க இஷ்டம்.
2. "அப்போ நாம ஏன் அதிக காசு கொடுத்து 'Branded' மருந்தையே வாங்கணும்?"
வாங்கணும்னு அவசியமே இல்லை! ஆனா, நாம வாங்குறதுக்கு சில காரணங்கள் இருக்கு:
பெயர் தெரியாது:
“”””””””””””””””
நம்மில் பலருக்கும் மாத்திரையோட 'வேதிப் பெயர்' (Chemical Name - அதாவது Metformin) தெரியாது. நாம கடைல போய் அந்த 'பிராண்ட் பெயரை'ச் சொல்லிக் கேட்கிறோம்.
தவறான எண்ணம்:
“””””””””””””””””
நம்ம மனசுல பதிஞ்சுபோன ஒரு தப்பான எண்ணம்: "விலை அதிகமா இருந்தா நல்லது, கம்மியா இருந்தா தரம் கம்மி"ன்னு நாமளே நினைச்சுக்குறது.
லாபம்:
“”””””
மருந்துக் கடைகளுக்கு, விலை கம்மியான ஜெனரிக் மருந்தை விக்கிறதை விட, விலை அதிகமான பிராண்டட் மருந்தை வித்தாதான் லாபம் அதிகம். அதனால அவங்க அதையே நமக்குத் தருவாங்க!
*லால்குடி வெ நாராயணன்*