பள்ளி மாணவ மாணவியர்களுக்கு AI (Artificial Intelligence ) தொழில் நுட்பத்துடன் கூடிய அதி நவீன கணினி பயிற்சி
Oct 03 2025
10

திருமயம் அருகே பனையப்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு AI (Artificial Intelligence ) தொழில் நுட்பத்துடன் கூடிய அதி நவீன கணினி பயிற்சி தொடக்க விழாவை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
எஸ். ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பனையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சி. மு. மு. அரு. அலமேலு அருணாச்சலம் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் வளர்ச்சிக்காக AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
எஸ். ரகுபதி அவர்கள் சிறப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்த பின்பு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர்,
முக்கியஸ்தர்கள்,
தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?