அரசு கல்லூரி கலைத்திருவிழாவில் நெருப்பில்லாத சமையல் போட்டி
Sep 19 2025
52

அரசு கல்லூரி கலைத்திருவிழாவில் நெருப்பில்லாத சமையல் போட்டி, விவாத மேடை, முப்பரிமாண கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஒவ்வொரு பூக்களுமே உள்ளிட்ட மூன்றாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
19, செப்டம்பர், அறந்தாங்கி.
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரி கலைத்திருவிழா நடைபெற்று வருகின்றது.இதன் ஒருபகுதியாக இன்று மூன்றாவது நாள் போட்டிகள் விவாத மேடை, முப்பரிமாண கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஒவ்வொரு பூக்களுமே ஆகிய போட்டிகளும், நெருப்பில்லாத சமையல் எனும் வித்தியாசமான போட்டியும், கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், கல்லூரியின் அனைத்துத் துறை மாணவ, மாணவியர் 29 அணிகளாக , 130 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இப்போட்டியில்,அவல் பாயாசம், கேரட் சாலட், அவல் இட்லி, பீட்ரூட் சாலட், பீட்ரூட் கட்லட், பொட்டுக்கடலை உருண்டை, நட்ஸ் லட்டு எனப் பலவகையான இயற்கை பொருட்கள் கொண்டு உணவு வகைகளை மாணவ, மாணவியர் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை, வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், பிற கல்லூரிகளில் இருந்து போட்டி நடுவர்களாக வருகைதந்த முனைவர்.என்.கே.ராஜேந்திரன், முனைவர் சதீஷ், முனைவர் ஜே.தேவி, முனைவர் வினோத்குமார், திரு.ஏ. ராஜேஷ் மற்றும் பல பேராசிரியர்கள் பார்வையிட்டு, சுவைத்துப் பாராட்டினர்.
போட்டி ஏற்பாடுகளை கல்லூரி கலைத்திருவிழாக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.கணேஷ்குமார், விழாக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் முனைவர் அ.டேவிட்கலைமணிராஜ், முனைவர் ஜி.ரெத்தின சிவக்குமார், முனைவர் எஸ். கார்த்திக், எஸ்.சுபாஷினி, ஏ.வனிதா, ஜி.பாண்டிச்செல்வி,து.சிற்றரசு, முனைவர் ரா.பிரகதாம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?