அரிசி தேங்காய் பால் பாயிசம்

அரிசி தேங்காய் பால் பாயிசம்



ஒரு மூடி தேங்காய் துருவல்

அரைகப் பச்சரிசி

ஒரு லிட்டர் பால்

ஒன்றரை கப் பொடித்த வெல்லம்

ஒரு ஸ்பூன் ஏலப்பொடி

தேவையான முந்திரி திராட்சை


செய் முறை


பச்சரியை வெது வெதுப்பான நீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.


ஒரு லிட்டர் பாலை காய்ச்ச வேண்டும். ஒரு கரண்டி போட்டு கிளற வேண்டும். அதிலிருந்து கொஞ்சம் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து அரைத்த விழுதை கட்டிகள் இல்லாமல் கரைத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சும் பாலில் விட்டு கைவிடாமல் கிளற வேண்டும்.


மற்றொரு அடுப்பில் வெல்லத்துடன் அரைகப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டி பாலுடன் சேர்க்கவும். ஏலப்பொடியும் சேர்த்து விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தண்ணீரோ காய்ச்சிய பாலோ சேர்க்கலாம். நன்கு வெந்தபின் இறக்கி முந்திரி திராட்சை அலங்கரித்து நைவேத்யம் செய்யலாம்.


பின் குறிப்பு: முந்திரி 2 பாதாம் 4 ஊறவைத்து சேர்த்து அரைக்கலாம். மில்க் மெய்டு, மில்க் பவுடர் சேர்க்கலாம். அவரவர் விருப்பம். நன்றி.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%