அரித்துவாரமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
Sep 20 2025
47

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம் சமுதாய கூட கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமை வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், நிகழ்வில் துணை கலெக்டர் தங்கபிரபாகரன் தலைமை வகித்தார், தாசில்தார் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமில் பொதுமக்களிடம் இருந்து 670 மனுக்கள் பெறப்பட்டன, இதில் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 310 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் ஆணை, விவசாயிகளுக்கான உபகரணங்கள், குடும்ப அட்டைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை துணை கலெக்டர் தங்கபிரபாகரன் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரித்துவாரமங்கலம் ஊராட்சி மன்ற செயலாளர் ராம் பிரகாஷ் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?