நாற்காலிகளில் மூன்று துளைகள் ஏன் இருக்கிறது..?

நாற்காலிகளில் மூன்று துளைகள் ஏன் இருக்கிறது..?


நமது வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறத்தில் துளை இருக்கும். 


பலர் இதை வெறும் டிசைன் என்று நினைக்கிறார்கள். 


ஆனால், இதற்கு பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன.


நாம் அனைவரும் கவனித்திருப்போம். 


நமது வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறத்தில் துளை இருக்கும். 


பலர் இதை வெறும் டிசைன் என்று நினைக்கிறார்கள். 


ஆனால், இதற்கு பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. 


அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


நாற்காலிகளில் துளை இருப்பதற்கு இது ஒரு மிக முக்கியமான காரணம். 


நாற்காலிகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது, காற்று அவற்றுக்கிடையே சிக்கிக் கொண்டு இறுக்கமாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளும்.


இதனால் அவற்றை எடுக்கும்போது கடினமாக இருக்கும். 


ஆனால், இந்த துளை இருப்பதால், காற்று எளிதில் வெளியேறும். 


ஆகையால், எத்தனை நாற்காலிகளை அடுக்கி வைத்தாலும், அவற்றை எளிதாக எடுக்க முடியும்.


நாற்காலிகள் தயாரிக்க சூடான பிளாஸ்டிக், அச்சுகளில் ஊற்றப்படுகிறது. 


இந்த துளைகள் நாற்காலியை அச்சிலிருந்து எளிதாக அகற்றவும், நாற்காலிக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் உதவுகின்றது என்று கூறப்படுகிறது. 


அதேபோல், இந்த சிறிய துளை நாற்காலியின் எடையை குறைக்கிறது.


மேலும், குறைவான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது உற்பத்திச் செலவையும் குறைக்கிறது. 


சிறிய துளையிடுவதன் மூலம், எப்படி


பெரிதாக என்ன உற்பத்தி செலவு குறையப் போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.


ஆனால், ஏற்றுமதியில் மில்லியன் கணக்கான நாற்காலிகள் என்று வரும்போது, இது மிகப்பெரிய சேமிப்பாக கருதப்படுகிறது.


நாற்காலியின் பின்புறத்தில் துளை இருப்பதால், ​​காற்று சுழற்சி எளிதாக இருக்கிறது. 


இதன் காரணமாக, அதில் அமர்ந்திருப்பவருக்கு வியர்வை போன்ற அசௌகரியம் ஏற்படாது.


அதேபோல், தண்ணீர் எதுவும் நாற்காலியில் விழுந்தால் ​​அந்த துளை வழியாக தண்ணீர் எளிதாக வெளியேறுகிறது. 


இது நாற்காலியில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது.


இதன் மூலம், எந்த ஒரு வடிவமைப்பும் வெறும் டிசைன் மட்டுமல்ல. 


அதன் பின் பல நன்மைகள் மற்றும் காரணங்கள் உள்ளன



லால்குடி வெ நாராயணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%