அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மாடவீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
Sep 29 2025
35

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மாடவீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள் இன்று (29.09.2025) திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள
மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் 01 கி.மீட்டர் தொலைவிற்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து வருகிறார்கள்.
அதன்படி மாடவீதிகளை சுற்றி நெடுஞ்சாலை துறை மூலமாக கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டதில் 80% பணிகள் முடிந்துள்ளது.
மீதம் எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாகவும் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் மாநகராட்சி ஆணையர் திரு.செல்வபாலாஜி அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?