அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்...!!

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்...!!


🙇 சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில் அமைந்துள்ளது.



🙇 சேலத்திலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவில் ஏத்தாப்பூர் உள்ளது. ஏத்தாப்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.



🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூப லட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி 'லட்சுமி கோபாலர்" என்று அழைக்கப்படுகிறார்.


🙇 இத்திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.



🙇 மூலவர் சன்னதியின் மேல் உள்ள மூலஸ்தான விமானம் 'திராவிட விமானம்" எனப்படுகிறது.


🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலின் பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.




🙇 பிரிந்திருந்த சிவன், அம்பிகையை மகாவிஷ்ணு இத்தலத்தில்தான் சமாதானமாக பேசி சேர்த்து வைத்தார்.


🙇 இதன் அடிப்படையில் இன்று வரையிலும் பிரச்சனைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியை சேர்த்து வைக்க உறவினர்கள் இக்கோயிலில் சமாதானம் பேசுகிறார்கள்.


🙇 இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை 'அருள்தரும் ஆஞ்சநேயர்" என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.



🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.




🙇 திருமணத்தடை நீங்க, துன்பங்கள் நிவர்த்தி அடைய தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்திக்கலாம்.


🙇 இத்தலத்திலே திருமண நிச்சயம் செய்து, பின் திருமணம் செய்து கொண்டால் தம்பதியர்கள் ஒற்றுமையாக வாழ்வர்கள் என்பது நம்பிக்கை.



🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றியும், சிறப்பு அபிஷேகங்கள் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

 

Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில்...!!




தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் என்னும் ஊரில் அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.



தேனியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அதாவது சுமார் 2 கி.மீ தொலைவில் அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.



கருவறையில் மூலவருக்கு முன்னே அமைந்துள்ள மகாமேரு மகத்துவம் வாய்ந்தது. அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.



காஞ்சி காமாட்சி அம்பாளின் சக்தி பெற்ற குங்குமத்தைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்து, அதன்மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்தபடி அழகு ததும்பக் காமாட்சி அம்பாள் காட்சி தருகிறாள்.


அம்மனின் பிரசாதமாகத் தரும் குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.


இங்கு நவராத்திரி விழாவின் முதல் நாளில், ஒரு சிறுமியைப் போல அம்பிகைக்கு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அடுத்தடுத்து அம்பிகையின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் அலங்காரம் செய்து மிகச்சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.




இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக வைபவத்தின்போது, காஞ்சி காமாட்சி அம்பாள் உடுத்திக் கொண்ட புடவையைப் பூஜித்து, இந்தக் கோயிலின் அம்மனுக்குச் சாற்றி, சிறப்பு பூஜை செய்துள்ளனர். எனவே, காஞ்சி காமாட்சியே இங்கு உறைந்து அருள்பாலிக்கிறாள் என கூறுகின்றனர்.


திரிதள விமானத்துடன் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர்.


பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், அஞ்சலி ஆஞ்சநேயர், நவகிரகம், சாத்தாவுராயன், சாது கருப்பர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளன.




இங்கு நவராத்திரி விழா விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது மற்றும் பங்குனி மாத திருவிழாவும் இத்திருக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.




கல்வி கேள்விகளில் ஞானத்துடன் திகழவும், விரும்பிய வேலை கிடைக்கவும், பணியில் பதவி உயர்வு கிடைக்கவும், கல்யாண வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.




இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு தீ சட்டி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்...!!



புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் ஊரில் அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.




புதுக்கோட்டையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் திருமயம் உள்ளது. திருமயத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.



இத்திருக்கோயிலில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.



சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.


இவ்விருகோயில்களும் திருமயம் மலை சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக உள்ளது.


இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்திய மூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும், மற்றொரு கரத்தில் சங்குடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள் திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.


அதாவது, பெருமாளின் கண்கள் அரைக்கண்ணாக மூடியும், இதழ்களில் மென் நகையுடனும், பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையிலும், வலக்கரம் ஆதிசேஷனை அணைத்துக் கொண்டும் காட்சியளிக்கிறார்.




அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயிலில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.


இத்தலத்தில் தாயார் உஜ்ஜீவனத்தாயார் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதி உலா வருவது இல்லை.


12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பானது மூலவர் பெருமாளுக்கு பூசப்படுகிறது.



வைகாசி பௌர்ணமி தேரானது 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.


கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் வருடபிறப்பு, ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.




உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியம் பெறலாம்.


நரம்பு தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் இத்தாயாரை வழிபட்டால் பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



இத்தலத்தில் பெருமாளுக்கு வெண்ணெய் பூசியும், சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் புடவை சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு திரிம்பகேஸ்வரர் திருக்கோயில்...!!




மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பாக் என்னும் ஊரில் அருள்மிகு திரிம்பகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.



நாசிக் மாவட்டத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் திரிம்பாக் அமைந்துள்ளது. திரிம்பாக்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.



சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


மூலஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.



மகாவிஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், பலராமர், ராமர், பாலாஜி, கங்காதேவி, விநாயகர், நந்தி, கோதாவரி அம்மன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது இந்த ஆலயம் அமைந்துள்ளது.


இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது. அம்மலையில் கௌதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன.


பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்த தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.



சிவபெருமானே இது புனித தலம் என, சிபாரிசு செய்த தலம் ஆகும். குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கிருந்து காவல் காத்து வருவது இத்தலத்தின் சிறப்பு. கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது.


ஆன்மிக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், ரிஷிகள் வாழ்ந்த தபோ வனங்களும் உள்ளன.



ராமர், லட்சுமணனுடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடைய செய்துள்ளார். எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள்.



பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.



இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதும், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும் எனவும் நம்புகின்றனர்.



இங்குள்ள மூலவருக்கு மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.


 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்...!!




திருவள்;ர் மாவட்டம் பேரம்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.




திருவள்;ரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் பேரம்பாக்கம் உள்ளது. பேரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.




தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட இக்கோயிலானது சோழர்களால் கட்டப்பட்டது.


அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் மூலவருக்கு குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர் என்னும் திருநாமமே சுருங்கி சோழீஸ்வரர் என்றாகிவிட்டது.


இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கி லிங்க ரூபமாய் காட்சியளிக்கும் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவது போன்ற அமைப்பைக் காண முடியும்.



இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் பக்தர் குறைதீர்க்கும் கருணைக்கடலாக, தெற்கு திசையை நோக்கி அருள்பாலிக்கிறாள்.


நாடி, நரம்பில் ஏற்படும் பாதிப்புகளை மூலவரான சோழீஸ்வரர் நிவர்த்தி செய்கிறார் என்பது நூற்றுக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.




அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் தல விருட்சம் வில்வம் மற்றும் தீர்த்தம் கூவம் ஆறு ஆகும்.


இத்தலத்தில் உள்ள கொடிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை, பிரதோஷ காலத்தில் தன்வந்திரி பகவான் வலம் வந்து சோழீஸ்வரரை தொழுகின்றார் என்ற ஐதீகம் உண்டு.


இந்த கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகரை சக்தி கணபதி என போற்றுகிறார்கள். இவர் வெறும் பெயரில் மட்டும் சக்தியை கொண்டிருக்கவில்லை. தன்னை நாடி வந்து சிரத்தையுடன் தொழும் பக்தர்களின் குறைகளை நீக்கும் சக்தி உடையவர்.


வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, ஐயப்பன், நாகர் ஆகியோர் சன்னதிகளும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன.



காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.




அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் நரம்புக் கோளாறு நீங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.




இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

 


 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%