விஷ்வ ப்ராஹ்மன் கல்யாண் பரிஷத்* அமைப்பு மற்றும் *பாரதிய ஜனதா கட்சி*, செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நகரம் இணைந்து நடத்திய பிறந்தநாள் விழா
*ஹர ஹர மஹாதேவா*
இன்றைய தினம் 25.12.2025 வியாழக்கிழமை அன்று மறைந்த முன்னாள் பாரத பிரதமர் கவிஞர் *அடல் பிஹாரி வாஜ்பாய்* அவர்கள் மற்றும் பாரத தேசத்தின் பிதாமகர் *பண்டித் மதன் மோகன் மாளவியா* அவர்கள் இருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமானது *விஷ்வ ப்ராஹ்மன் கல்யாண் பரிஷத்* அமைப்பு மற்றும் *பாரதிய ஜனதா கட்சி*, செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நகரம் இணைந்து நடத்திய பிறந்தநாள் விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில், பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனை நாயகர்களான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் *H ராஜா ஜி* அவர்களுக்கு *வாழும் பாரதியார்* விருதும், சங்கரா குழுமத்தின் தலைவர் பம்மல் *சே விஸ்வநாதன் ஜி* அவர்களுக்கு *துரோணாச்சாரியார்* விருதும், *திருமதி மங்களம் பாலசுப்பிரமணியன் ஜி* அவர்களுக்கு தூய்மை பணிக்கான *வாழும் சாதனையாளர்* விருதுகளை, நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான *விஷ்வ பிராம்மன் கல்யாண் பரிஷத்* அமைப்பின் தேசிய துணை தலைவர் *சுவாமி ஸ்ரீராம் சித்ரகுப்த ஜி மஹராஜ்* அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், "விஷ்வ பிராம்மன் கல்யாண் பரிஷத்" அமைப்பின் தமிழக மாநில தலைவர் *ஜெகன்நாதன் ஜி* அவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளளுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
விழாவினை சிறப்பாக தலைமை ஏற்று நடத்திய *விஷ்வ பிராம்மன் கல்யாண் பரிஷத்* அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் *வெ பாலகிருஷ்ணன் ஜி* அவர்கள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்த அமைப்பின் பம்மல் நகரத் தலைவர் *கோதண்டராமன் ஜி* அவர்கள் நகர பொது செயலாளர் *முரளி ஜி* அவர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அமைப்பின் தேசிய துணைத் தலைவர் *சுவாமி ஸ்ரீராம் சித்ரகுப்த ஜி மஹராஜ்* அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் *H ராஜா ஜி*, தமிழக மாநில துணைத்தலைவர் *டால்ஃபின் ஸ்ரீதரன் ஜி* செங்கல்பட்டு மாவட்ட தலைவர் *ரகுராமன் ஜி* மாநில செயற்குழு உறுப்பினர் கலைமாமணி *தினா ஜி* பிரச்சாரப் பிரிவின் மாநில இணை அமைப்பாளர் ஓமாம்புலியூர் *ஜெயராமன் ஜி* முன்னாள் பொதுச்செயலாளர் *ஹரிபாபு ஜி* பம்மல் சங்கரா குழுமத்தின் தலைவர் *விஸ்வநாதன் ஜி* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் *நாராயணன் ஜி* மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட *சந்த் மஹாசபா* வின் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
*J பாக்கியலட்சுமி*,
மாநில பொதுச்செயலாளர்,
விஷ்வ பிராம்மன் கல்யாண் பரிஷத்.