அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில்...!!

அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில்...!!


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.



தூத்துக்குடியில் இருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது.



இங்கு சுவாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் கையில் தண்டம் வைத்துக் கொண்டும், தலைக்கு மேலே ஆதிசேஷனை குடையாக கொண்டும் காட்சி தருகிறார். 


இங்கு மூலவரான ஸ்ரீவைகுண்டநாதருடன் தாயார்கள் காட்சி தருவது கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி அமைந்துள்ளது.



நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரிய தலமாகும்.


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81வது திவ்ய தேசம் ஆகும்.


தினமும் காலையில் இவருக்கு பாலில் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. இதனால் இத்தல மூலவருக்கு 'பால்பாண்டி" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.




இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனிச்சன்னதி இல்லை.


இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. 


வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு சென்று அடைத்துவிடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடையை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.



வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத் திருவிழா ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



பக்தர்கள் பிறப்பில்லா நிலை (மோட்சம்) கிடைக்க சுவாமியை வணங்குகின்றனர். 


ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


 

Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்...!!



🙏 ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.



🙏 சித்தூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காணிப்பாக்கம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காணிப்பாக்கத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.




🙏 இத்தலத்தில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 


🙏 மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இத்தலமும் ஒன்று.



🙏 காணிப்பாக்கம் விநாயகர் பெருமானை ஆந்திர மாநில மக்கள் தங்களின் நீதி தேவனாக கருதி வழிபடுகின்றனர்.


🙏 இதற்கு காரணம் இக்கோயிலில் தினமும் மாலை 'சத்திய பிரமாணம்" நிகழ்ச்சி நடைபெறுகிறது.


🙏 இங்கு நடைபெறும் சத்திய பிரமாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.


🙏 பொய் சத்தியம் செய்பவர்கள் காணிப்பாக்கம் விநாயகரால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது இங்கு வரும் பக்தர்கள் பலரின் அனுபவமாக இருக்கிறது.




🙏 இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.


🙏 வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.


🙏 ஆந்திர மாநில மக்கள் அதிகளவில் வந்து வழிபடும் ஒரு கோயிலாக காணிப்பாக்கம் விநாயகர் கோயில் இருக்கிறது.



🙏 விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.



🙏 இத்தலத்தில் நாகர் சன்னதி இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


🙏 பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.



🙏 விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

 

Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்...!!




கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் ஊரில் அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.



திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் குருவாயூர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. குருவாயூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் உள்ளது.




பூலோக வைகுண்டமாகவும், பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புதமான திருத்தலம் இது.


இத்தலத்தில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.


ஏனெனில் இந்த விக்கிரகம் மிகவும் புனிதமான 'பாதாள அஞ்சனம்" என்னும் கல்லில் வடிக்கப்பட்டது.



குருவாயூரப்பனின் உருவமானது நான்கு கைகளைக் கொண்டுள்ளது. அவர் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றைத் தன் நான்கு கைகளில் சுமந்து அழகாய் காட்சி தருகிறார்.




குருவாயூர் கோயில் சதுர வடிவில், மலையாள கட்டிட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரைகள் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.


இக்கோயில் கிழக்கு கோபுர வாசலில் இருந்தே குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்கும் படியும், (சித்திரை விஷூ தினத்தன்று) காலைக் கதிரவனின் ஒளிக் கற்றைகள் குருவாயூரப்பன் திருவடிகளில் விழுமாறும் அமைக்கப்பட்டுள்ளது.


குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதல் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.


கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய், தந்தையருக்கு குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.


சித்திரை விஷூ, விருச்சிக ஏகாதசி, ஓணம் பண்டிகை ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.




குழந்தைகளுக்கு ருசியான சாப்பாடு கிடைக்கவும், தம்பதியினர் தீர்க்க ஆயுளுடன் வாழவும், வெண்குஷ்ட நோய் உள்ளவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.




இக்கோயிலில் பிரார்த்தனை நிறைவேறியதும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் யானைகளை காணிக்கையாக வழங்குகின்றனர் மற்றும் சுவாமிக்கு துலாபாரம் கொடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்...!!




மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள பரளி என்னும் ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.



பீட் மாவட்டத்தில் இருந்து சுமார் 92 கி.மீ தொலைவில் உள்ள பரளி என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.




சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்தில் சிவபெருமான் மலைக் குன்றின் மீது மருந்தீசர் என்ற திருநாமத்துடன் அமர்ந்து உள்ளார்.


இத்தலத்தில் உள்ள அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர் மற்றும் மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர் என்பது நம்பிக்கை.


இது நோய் தீர்க்கும் கோயில் என்பதால் இத்தல மூலவர் வைத்தியநாதம் என்ற பெயர் பெற்றார்.



விநாயகர், கார்த்திகேயர், வீரபாகு, நந்தி, ஐயப்பன், திருமால், காளி ஆகிய பரிவார மூர்த்திகள் இத்தலத்தில் உள்ளனர்.



இத்தலத்தில் 21 பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.


வைத்தியநாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும், கிழக்குப்பக்கமும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.


கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது.


இக்கோயிலில் வைத்தியநாதர் அழகிய லிங்கவடிவில் காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் உள்ளே சென்று வைத்தியநாதரை தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம்.



ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்து கொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே இக்கோயிலுக்கு வருவார்கள்.


இத்தல வைத்தியநாதரை பிரார்த்தனை செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.




சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப்பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


இங்கு ஜனவரி பஞ்சமி மேளா, மார்ச் மகா சிவராத்திரி, பௌர்ணமி ஆகியவை முக்கிய விழாக்களாகும்.


இங்கு மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்தியநாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகல நோய்களையும் தீர்த்து வைப்பார்கள் என்பது நம்பிக்கை.




இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


 

Thanks and regards 

A s Govinda rajan 



அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்...!!!




உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி என்னும் ஊரில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.



இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர்வண்டி மூலம் காசியை சென்று அடையலாம். காசியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 




இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் காசியே முதன்மையானது.


அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.


இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனிச்சிறப்பு.


இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது.



இக்கோயிலில் உள்ள கருவறையின் தங்க மேடையில் லிங்க ரூபியாக சிவபெருமான் அருள்புரிகிறார். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமானின் திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும்.


கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது என்பது நம்பிக்கை.



காசியில் இறந்து போனால் சொர்க்கத்தை அடைவார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம் மற்றும் ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் நம்பிக்கை.


இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து இறைவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். 


கங்கா ஆரத்தி : காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும். காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி.


தீர்த்தக் கட்டங்கள் : கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். 



இத்தலத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி, ஹோலிப்பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.




திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்...!!




🦚 நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி என்னும் ஊரில் அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.




🦚 நீலகிரியில் இருந்து சுமார் 34 கி.மீ தொலைவில் கோத்தகிரி உள்ளது. கோத்தகிரியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.



🦚 முருகன் தண்டாயுதத்துடன் நிற்பது போல் இல்லாமல் இத்தலத்தில் வேலுடன் காட்சியளிக்கிறார்.



🦚 மூலவரின் இடது பாகத்தில் மயில் தோகை இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.


🦚 இத்தலத்தில் ஞான பண்டிதனாகிய முருகப்பெருமான் ஞான சக்தியாக விளங்குவதால் இத்தலம் சக்திமலை எனப் பெயர் பெற்றது.


🦚 இத்தலத்தில் முருகப்பெருமானை வேண்டி தியானத்தில் ஈடுபட்டால் மன அமைதி பெற்று படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பது நம்பிக்கை.




🦚 இத்தலத்தின் பிரகாரத்தில் ஆதி விநாயகர், சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை, பைரவர், சண்டிகேஸ்வரர், நாகர் ஆகியோர் தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.



🦚 இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய மூவரும் காட்சி தருகின்றனர்.


🦚 இக்கோயிலில் சனி பிரதோஷ நாளன்று 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு மஹாந்யாஸ பாராயணமும், ருத்ர ஹோமும் செய்யப்படுவது மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.



🦚 வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


🦚 இத்தலத்தில் வருட வைபவம் கொடியேற்றத்துடன் 11 நாட்கள் நடைபெறும். 9ஆம் நாள் திருக்கல்யாணமும், 10ஆம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.


🦚 கிருத்திகை, பௌர்ணமி, சண்டி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.




🦚 வழக்கு சார்ந்த பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் கால்நடைகளின் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி இக்கோயிலில் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.


🦚 செவ்வாய் மற்றும் நாகதோஷம் இருப்பவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.


🦚 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


 

Thanks and regards 

A s Govinda rajan 

second Street Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%