அவலநிலை

அவலநிலை


             " ஒவ்வொரு நாளும் இந்த மனவேதனை தேவையா இந்த மானம் கெட்ட பிழைப்பும் தேவைதானா என்று புலம்பியபடி தன் அறைக்குள் நுழைந்தாள் டாக்டர் நளினி .


       " அந்த ஊரில் பெயர் பெற்ற கைனகாலஜிட் டாக்டர் நளினி தான். சிறந்த உழைப்பு அர்ப்பணிப்பு சேவை குணம் கடுமையான உழைப்பாளி . எல்லாம் இருந்தும் இப்போதெல்லாம் மனக்குமுறல் மிகுந்து காணப்பட்டாள் டாக்டர் நளினி .


      " பெண் என்றாலே வரம் அதிலும் குழந்தை பிறப்பு என்பது தவம் , பெண்களின் மறுபிறவி என்றுக் கூட சொல்லாம் .


                   " ஆனாலும் டாக்டர் நளினியின் புலம்பலுக்கு காரணம் தினம் தினம் பெருகி வரும் கருகலைப்பு தான் . "


              அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் , கல்லூரி மாணவிகள் , பள்ளி மாணவிகள் என்று குவியும் கூட்டத்தை கண்டு பெண் இனம் மீது ஒரு கடுப்பும் எரிச்சலும் கோபமும் பொங்கி எழுந்தது டாக்டர் நளினிக்கு .


        " பணம் இல்லாத போது பிணம் கூட மதிக்காது என்பது மட்டும் நன்றாக தெரிந்த நளினி வேறு வழி இல்லாமல் டாக்டர் தொழிலை செய்து வந்தாள்.


        " கருகலைக்க வரும் பெண்கள் சொல்லும் முதல் வார்த்தை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்பது தான். டாக்டர் தொழிலை விட்டு விட்டு அமைதி தேடி ஓடிவிடலாம் என்று கூட சில நேரங்களில் நினைப்பாள் நளின் . அந்த அளவுக்கு பெண்கள் சமுதாயம் மோசம் .


                 " குழந்தை இல்லாத தம்பதியர்க்கு ஊக்கம் கொடுக்கவும் , முதிர்கன்னி , விதவையை கண்டு இரக்கமும் அனாதை குழந்தைகள் அரசுத் தொட்டிலில் விழுவதை தடுக்கவும் தன் பயணத்தை தொடர்ந்தாள் டாக்டர் நளினி .


        " இந்த காலத்தில் கருகலைப்பு என்பது தினமும் தெரு வாசலைக் கூட்டி கோலம் போடுவது போல் வாடிக்கையாகி விட்டது என்பது மட்டும் உண்மை என்றாள் மனதுக்குள் டாக்டர் நளினி .


    " இந்த அவல நிலையை கண்டு வெம்பி மனதைக் கல்லாக்கிக் கொண்டு நடை பிணமாய் அடுத்த கரு கலைப்பிற்கு கையில் ஆயுத்தை எடுத்தாள் டாக்டர் நளினி திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற பாடல் வரிகளை முனு முனுத்த வண்ணம் .


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.

      9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%