
அவசர பயணத்தால்-
அன்றாடம் நடக்கிறது
சாலை விபத்து!
விதிமுறைகளை மீறுவதால்-
விபத்து ஏற்படுகிறது-அதை
விதி என்கிறார்கள்!
நீயா? நானா? என்ற-
வேகப் போட்டியில்
வென்று விடுகிறது விபத்து!
தூக்கப் பயணம்-
துக்கத்தில் முடிந்தது
அகால மரணம்!
கவனக்குறைவால்-
காணாமல் போகிறது
மனித உயிர்கள்!
மது குடித்துவிட்டு-
ஓட்டும் ஓட்டுநரின்
இரத்தத்தை
சாலை குடித்தது!
விலைமதிப்பில்லா-
உயிர்களோடு
விளையாடுகிறது
வாகனங்கள்!
மாட்டு வண்டியும்-
மிதிவண்டியும்
சந்திக்கவே இல்லை
சாலையோர விபத்தை!
யானை போல வருகிறது
பேருந்து-
மணி ஓசையிட்டு வருகிறது
செல்போனில் விபத்து!
ஆசைகளோடும்-
கனவுகளோடும்
செல்பவர்கள் எல்லாம்
அனாதை பிணமாக
கிடக்கிறார்கள்
சாலை ஓரத்தில்!
விபத்தை தடுப்போம்-
உயிரைக் காப்போம்
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்!
பாரதி முத்து
எண் 71, 5தெரு
சாமி நகர் ஓட்டேரி
வேலூர்- 2
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?