அ.தி.மு.க.வுக்கு வந்தால் தேவையான உதவி கிடைக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
Oct 11 2025
51
நாமக்கல், அக்.12
மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் பல கட்சிகளில் இருந்து விலகி 1000 பேர் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் சேர்ந்தனர். இதில் பழனிசாமி பேசுகையில், அதிமுகவை பொறுத்தவரையில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவிகள் தேடி வரும். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்எல்ஏ.,-க்கள் பொன்.சரஸ்வதி, கே.கே.பி.பாஸ்கர் உள்பட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?