கோவில் தொகுப்பூதிய பணியாளர்கள் 1500 பேர் 4 மாதத்தில் பணிநிரந்தரம் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, அக். 12-
கோவில்களில் தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள 1500 பேர் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சென்னை, அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் மாநில சிறப்பு மாநாடு நேற்று நடந்தது. இதை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்துபேசியதாவது-
திராவிட மாடல் அரசின் நான்காண்டுகளில் கோவில் பணியாளர்கள் 1,351 பேர் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றியுள்ள 1,500 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
உங்களது கோரிக்கைகளாக யூனியனுக்கு அலுவலகம், வீட்டு வாடகைப்படி உயர்வு, கோவில்களின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பள செலவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பொது நிதியாக ஏற்படுத்தி அதன்மூலம் கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை துறை செயலாளர் மற்றும் ஆணையரிடம் கலந்து பேசி, முதல்-அமைச்சரின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு எட்டப்படும்.கோவில் வருமானத்தில் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் விகிதம் 20 சதவீதம் என்று இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்றபின் அந்தந்த கோவில்களின் செலவினத்திற்கு ஏற்றாற்போல் 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளோம். எந்த ஒரு பணியாளரும் பணிக்கேற்ற ஊதியம் இல்லாமல் பணியாற்றமாட்டார்கள் என்ற உறுதியை வழங்குகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?