
திருநெல்வேலி, செப். 28-
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் 11 அணிகள் பங்கேற்றன. போட்டியை பல்கலைக்கழக உடற்கல்வி மைய இயக்குநர் ஆறுமுகம் தொடங்கிவைத்தார். உடற்கல்வி துறை தலைவர் துரை, உடற்கல்வி இயக்குநர் ஹமர் நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி முதலிடமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி இரண்டாம் இடமும், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி மூன்றாம் இடமும், கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரி நான்காம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேராசிரியர் கலா பரிசளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%