ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு  ஒத்திவைப்பு கோரிக்கை  பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

சென்னை:

புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் பரி சீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக் கான தேர்வை அக்.12 ஆம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரி யம் அறிவித்துள்ளது. இந்த தேர்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டத்தை கூடுதலாக இணைத்து, பழைய பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்த மனுதாரர், புதிய பாடத் திட்டத்திற்கு உரிய கால அவகாசம் இல்லாததால் தேர்வுக்கு தயாராகியவர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார். எனவே போட்டித் தேர்வை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசா ரணைக்கு வந்த போது, ஆசிரியர் தேர்வு வாரியம் பரி சீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தர விட்டு வழக்கை முடித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%