
உடுமலை, செப்.16-
உடுமலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா வட்டார தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சத்யராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் பேசினார். பொள்ளாச்சி ஈஸ்வர சாமி எம்பி, உடுமலை நகராட்சி தலைவர் மத்தின் வாழ்த்தி பேசினர்.
விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்கும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தங்கவேல், ஆனந்தி, தர்மராஜ், கண்ணபிரான் ஆகிய நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?