ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

சென்னை:

ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்​னை​யில் கடற்​கரை, கோயில் தெப்​பக்​குளம் உட்பட பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். முன்​னோர் வழி​பாட்​டுக்கு உகந்தநாளாக அமா​வாசை கருதப்​படு​கிறது. அதிலும், ஆடி, புரட்​டாசி (மகாள​யம்), தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள், கூடு​தல் சிறப்பு வாய்ந்​த​தாக கூறப்​படு​கிறது.


ஆடி அமா​வாசை நாளில் புனித நீராடி, முன்​னோருக்கு எள் மற்​றும் அரிசி மாவால் செய்​யப்​பட்ட பிண்​டங்​களை வைத்து தர்ப்​பணம் செய்​வது, அவர்​களின் ஆசிகளைப் பெற்று குடும்​பத்​தில் சுபிட்​சம் உண்​டாகும் என்​பது ஐதீகம்.


ஆதர​வற்​றவர்​களுக்​கு உணவு: இந்​நிலை​யில், ஆடி அமா​வாசை​யான நேற்று தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் திரண்​டு, முன்னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர்.


சென்​னை​யில் மெரி​னா, பட்​டினப்​பாக்​கம், பெசன்ட் நகர் உள்​ளிட்ட கடற்​கரை பகு​தி​களில் அதி​காலை முதலே ஏராள​மானோர் திரண்​டனர். கடலில் நீராடி​விட்​டு, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​து, சூரிய பகவானை வழிபட்​டனர்.


மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர், சைதாப்​பேட்டை காரணீஸ்​வரர், திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ர​தி, வியாசர்​பாடி ரவீஸ்​வரர் கோயில் உள்​ளிட்ட பல்​வேறு கோயில்​களின் தெப்​பக்​குள கரைகளி​லும் காலை முதலே ஏராள​மானோர் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர்.


முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​வதற்​கான சடங்​கு​களை புரோகிதர்​கள் செய்து வைத்​தனர். பலரும் குடும்​பத்​துடன் கோயில்களுக்கு சென்று பிரார்த்​தனை செய்​தனர். வீடு​களில் முன்​னோரின் படங்​களுக்கு முன்பு படையலிட்டு வழி​பாடு செய்தனர். மேலும் பலர் ஆதர​வற்​றவர்​களுக்​கு உணவு, ஆடை உள்​ளிட்டவற்றை வழங்கினர்.


-------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%