ஆண் நண்பருக்காக 10-ம் வகுப்பு மாணவிகளுக்குள் எழுந்த பிரச்சினை..
Sep 14 2025
52

சக மாணவிகள் 4 பேர், அந்த மாணவியை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில், சம்பவத்தன்று 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக மாணவிகள் 4 பேர், அந்த மாணவியை தாக்கியதுடன், பிளேடால் சரமாரியாக கீறினார்கள். இதில் 10-ம் வகுப்பு மாணவியின் முகம் மற்றும் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டச்சொட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு, காயம் அடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டு உள்ளன.
மாணவி தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் ஆண் நண்பருடன் பேசுவது தொடர்பாக, சமீபத்தில் தாக்கப்பட்ட மாணவிக்கும், மற்றொரு மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த மாணவி தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு 10-ம் வகுப்பு மாணவியை கேலி கிண்டல் செய்து வந்ததும், சம்பவத்தன்று பிளேடால் தாக்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக 16 வயதான 2 மாணவிகள் மற்றும் ஒரு 14 வயது மாணவி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?