
நேற்றைய வாசகர் கடிதம் பகுதியில் தென்காசி வாசக சொந்தம் வெங்கடாசலபதி அவர்கள் இலவசம் பற்றி எழுதியிருந்தது அருமை.
இந்த எண்ணம் தமிழ் நாடு இ பேப்பரை வாசிக்க ஆரம்பித்த
முதல் நாளில் இருந்தே
அடியேன் மனதில் அரித்துக் கொண்டே இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழ் நாடு இ பேப்பரோடு ஆனந்த பாஸ்கர், பல்சுவை களஞ்சியம், சிறுவர் உலகம் என்று பல்வேறு அம்சங்களை
வாசக சொந்தங்களுக்கு இலவசமாக அளித்து வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தினர்
நண்பர் குறிப்பிட்டு சொன்ன கருத்தை
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
வாசக நண்பரின் விருப்பத்தை ஏற்று சந்தா அறிவிப்பை
தமிழ் நாடு இ பேப்பர்
அறிவித்தால்,
தமிழ் நாடு இ பேப்பரின் பொறுப்பு மிக்க அன்பான --
பண்பான வாசக பெருமக்கள் அனைவரும் தவறாமல் ஆதரவு அளித்து உற்ற துணையாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நல்ல காரியத்திற்கு
ஆண்டவன் அருளும்
கட்டாயம் உண்டு.
தமிழ் நாடு இ பேப்பர்
என்றென்றும் மார்க்கண்டேய வரம்
பெற்ற இளமைப் பொலிவோடு சிறந்தோங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
குன்றா அன்புடன்
ஆ.ராமகிருஷ்ணன்
தென்காசி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?