ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி
Sep 22 2025
33

தேனி, செப்.19- தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூல மாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஜெர் மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ள தாக மாவட்ட ஆட்சியர் ரஞ் ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி. நர்சிங், பொது நர்சிங், மருத் துவ டிப்ளமோ, பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினிய ரிங், பயோமெடிக்கல் இன்ஜி னியரிங், மின் மற்றும் மின் னணு பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப வருமானம் ஆண் டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் ளும் இருக்க வேண்டும். இப் பயிற்சிக்கு கால அளவு 9 மாதம். மேலும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவி னத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்த வுடன் தகுதியான நபர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத் தின் சார்பாக ஜெர்மனி நாட் டில் பணிபுரிய (ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 2,50,000 முதல் ரூ.3,00,000 வரை) வேலை வாய்ப்பு ஏற் படுத்தி தரப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்க லாம். மேலும், கூடுதல் விவ ரங்கள் அறிய மாவட்ட மேலா ளர், தாட்கோ, அறை எண். 73, மாவட்ட ஆட்சியர் அலு வலகம், தேனி என்ற முக வரிக்கு நேரில் அல்லது 94450 29480 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?