கம்பம்மெட்டு மலைச்சாலையில் கேரள கழிவுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கம்பம்மெட்டு மலைச்சாலையில்  கேரள கழிவுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கம்பம், செப்.19-


தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையாக கம் பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. தமிழக எல்லை அருகில் உள்ளதால் கேரளப் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் குப்பைகள் தமிழக வனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கம்பம்மெட்டு மலையடி வாரத்தில் உள்ள புதுக்குளம் பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மூட்டை மூட்டையாக குப்பை கள் கொட்டப்பட்டன. தகவலறிந்த மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையில் ஆய்வு நடத்தப்பட் டது. அப்போது எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கழிவுகள் இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் அந்தக் குப்பைகள் அகற்றப்பட் டன. தொடர்ந்து மதுரை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய உதவி பொறியாளர் காரு ண்யாராஜா, தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கவிதா ஆகி யோர் தலைமையிலான குழுவினர் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் வாகனங் களை பரிசோதித்தனர். இனிமேல் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களையும் சோதித்த பின்பே, தமிழகத்துக்குள் அனு மதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சோத னைச்சாவடி அலுவலர்களுக்கு அறி வுறுத்தினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%