ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளங்களில் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளங்களில் மோசடி



தூத்துக்குடி, ஜன.- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சமூக வலை தளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தூத்துக் குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளி கள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக டெலிகிராம், இன்ஸ்டா கிராம்,ஸ்நாப்சாட், வாட்ஸ்அப் (Telegram, Instagram, Snap chat ,WhatsApp) மூலமாக போலி யான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். இந்த வகை மோசடிகளில் குற்ற வாளிகள் டெலிகிராம் மூலம் பொது மக்களை தொடர்புகொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று உறுதி அளித்து முதலீடு செய்ய தூண்டு கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, முதலில் அவர்களை டெலிகிராம் குழுக்களில் சேர்த்து, போலியான லாப ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் தவறான வெற்றி தகவல்களை பகிர்ந்து, உண்மையான வர்த்தக நடவடிக்கை போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். முதலீடுகளில் சிறு லாபங்க ளை காண்பித்து வாடிக்கையா ளர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர், அதிக தொகையை முதலீடு செய்யுமாறு கூறி, உண்மையான முதலீட்டு இணைய தளங்களைப் போல் வடிவ மைக்கப்பட்ட போலி வர்த்தக இணையதளங்களுக்கு வழி நடத்துகின்றனர். இத்தகைய போலி இணைய தளங்களில் வர்த்தக விளக் ளப்படங்கள் (candlestick) நேரடி விலை மாற்றங்கள் போன்றவை காட்டப்பட்டு அனைத்தும் உண் மையாக தோன்றும் வகையில் கையாளப்படுகின்றன. இதனை நம்பி அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட வர்கள் பணம் செலுத்துகின்றனர். பின்னர் சைபர் மோசடியாளர்கள் அவர்கள் தொடர்பை துண்டித்து விடுவதையடுத்து பொதுமக்கள் தங்கள் முதலீட்டு பணத்தை திரும்பப் பெற முடியாமல் மோசடி அடைகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்சமயம் இதுபோன்று பொது மக்களின் விரைவான லாப ஆசையை பயன்படுத்தி போலி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்களின் மூலம் திட்டமிட்டு இவ்வகை ஆன்லைன் முதலீட்டு மோசடி புகார்கள் கணிச மாக அதிகரித்து வருகின்றது. எனவே சைபர் குற்றவாளிக ளிடமிருந்து பொதுமக்கள் தங்க ளை தற்காத்துக்கொள்ளுமாறு சைபர் குற்றப்பிரிவு கேட்டுக் கொள்கிறது. முதலீட்டு அழைப்புகளை தவிர்த்திடுக எனவே, பொதுமக்கள் அனை வரும் எந்தவொரு ஆன்லைன் முதலீட்டு திட்டத்திலும் ஈடுபடும் முன் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, தெரியாத சமூக ஊடக தொடர்புகள் அல்லது சரிபார்க்கப்படாத இணையதளங்கள் மூலம் வரும் முதலீட்டு அழைப்புகளை தவிர்க்க வேண்டும். உறுதியான, விரை வான அல்லது மிக அதிக லாபம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி களை நம்ப வேண்டாம். இவை மோ சடியின் முக்கிய அறிகுறிகளாகும். செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற இணையதளங்கள் மற்றும் அதி காரப்பூர்வமாக அனுமதிக்கப் பட்ட செயலிகள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய அறிவுறுத்தப் படுகிறது. புகார் அளித்திடுக மேலும் சந்தேகத்திற்கிடமான முதலீட்டு சலுகைகள் கிடைத்தா லோ அல்லது இதுபோன்று ஏமாற் றப்பட்டாலோ உடனடியாக சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும் என பொது மக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேற்படி புகார் மீது உடனடி நட வடிக்கை மேற்கொண்டு மேலும் நிதி இழப்புகளை தவிர்த்து, குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%