மின்னணு வாக்குப்பதிவு கருவி செயல்முறை விளக்க மையங்கள்

மின்னணு வாக்குப்பதிவு கருவி செயல்முறை விளக்க மையங்கள்



சென்னை, ஜன. – இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் புதனன்று (ஜன.21) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த கருவிகளின் செயல்விளக்கம் அளிப்பதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான செயல்முறை விளக்க மையங்கள் சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் என மொத்தம் 10 இடங்களில் புதனன்று முதல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்விற்காக செயல்முறைக்கு வைக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%